திருச்செங்கோட்டில் வைகாசி விசாக தேர்த்திருவிழா பட்டிமன்றம்

திருச்செங்கோடு, மே 21:  திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற வைகாசி விசாக தேர்த்திருவிழாயையொட்டி பட்டிமன்றம் நடைபெற்றது. திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு  டெம்பிள் ஜேசி சங்கத்தின் சார்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சியாம் தலைமை வகித்தார். முன்னாள் தேசிய சட்ட ஆலோசகர் வக்கீல் உலகநாதன் துவக்கி வைத்து பேசினார். ஜேசி  மண்டல உதவித்தலைவர் மதிவாணன், மண்டல இயக்குனர் கவிக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.“இன்றைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவை சொத்து சுகமா- சொந்த பந்தமா” என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது. கோவை விஜய்குமார், திருப்பூர் ரதிசுதா, சேலம் மதுமிதா, ஈரோடு தீபிகா, லீலாவதி, தலைவாசல் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இரு அணிகளின் வாதங்களை கேட்ட நடுவர் ஹரி, “மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவை சொந்த பந்தமே” என தீர்ப்பு வழங்கினார்.

Related Stories: