கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு மணல் திருட்டு: ஒருவர் கைது

திருச்சுழி, மே 16: திருச்சுழி பகுதியிலுள்ள குண்டாற்றில் நாள்தோறும் மணல் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், எஸ்பி ராஜராஜன் அறிவுறுத்தலின் பேரில் திருச்சுழி டிஎஸ்பி சசிதரனின் உத்தரவின் பேரில், சப்இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆனைக்குளம் குண்டாற்று பகுதியிலிருந்து சுமோ காரில் நூதன முறையில் மணல் அள்ளி வந்த, உடையசேர்வைகரன்பட்டியைச் சேர்ந்த முனியசாமி மகன் ஈஸ்வரன் என்பவரை போலீசார் பபிடித்தனர். இவர் மீது வீரசோழன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, திருச்சுழியிலிருந்து காரியாபட்டி செல்லும் சாலையில் சப்இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது குச்சம்பட்டிபுதூர் பகுதியில் இருந்து வந்த டிப்பர் லாரியை மடக்கிப் பிடித்தனர். லாரியை நிறுத்தியடிரைவர் தப்பியோடினார். அந்த லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்த போலிசார் திருச்சுழி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Related Stories: