மாவட்ட கால்பந்து லீக் மதுக்கரை அணி வெற்றி

கோவை, மே 14 :   கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ‘சி’ டிவிஷன் கால்பந்து போட்டிகள் கார்மல் கார்டன் பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், மொத்தம் 9 அணிகள் பங்கேற்றுள்ளது. நேற்று நடந்த போட்டியில் மதுக்கரை எப்.சி அணியும் எம்.ஆர் எப்.சி அணியும் மோதின. தொடக்கம் முதலே இரண்டு அணிகளும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் மதுக்கரை யு.எப்.சியின் அஸ்வின் முதல் கோல் அடித்தார். இதன் மூலம் மதுக்கரை அணி 1-0 என்ற கோல் கணக்கில் எம்.ஆர்.எப்.சி அணியை வீழ்த்தியது. இன்று நடக்கும் போட்டியில் போத்தனூர் எப்.சி மற்றும் வாகா எப்.சி அணிகள் மோதுகின்றன.

Related Stories: