கருங்கல், மே 14 : கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் டாக்டர் தங்க சுவாமி தலைமை வகித்தார். தாளாளர், முதல்வர் முன்னிலை வகித்தனர். ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர் டேனியல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இவ்விழாவில் ஸ்காட் கிறிஸ்தவ பள்ளி முன்னாள் தாளாளர் டேனியல் புரூடின் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.