எம்எல்ஏ பதவியை பறித்த அதிமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்

செய்துங்கநல்லூர், மே 14: சசிகலாவுடன் சேர்ந்த காரணத்தினால் தனது எம்எல்ஏ பதவியை பறித்த அதிமுகவுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் பிரசாரம் செய்தார். ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தரராஜன் கருங்குளம் ஒன்றிய பகுதியான விகோவில்பத்து, நாட்டார்குளம், கொள்ளீர் குளம், இந்திராகாலனி, வள்ளுவர் காலனி, விட்டிலாபுரம், முத்தாலங்குறிச்சி, அனவரதநல்லூர், சமத்துவபுரம், ஆழிகுடி , வசவப்புரம் உள்பட பல பகுதியில் பிரசாரம் செய்தார். விட்டிலாபுரத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் பேசியதாவது:

Advertising
Advertising

என்னை கடந்த தேர்தலில் தொகுதிக்கு உழைக்க வேண்டும் என்பதற்காகவே தேர்ந்தெடுத்தீர்கள். நானும் உற்சாகமாக உழைத்து வந்தேன். இந்த பகுதி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவும், விட்டிலாபுரம், மணக்கரை சாலை உள்பட பல சாலைகளை சீரமைக்கவும், குக்கிராமங்களில் உள்ள அனைத்து தெருக்களை சீர்படுத்தவும் நடவடிக்கை எடுதது வந்தேன். ஆனால் நான் சசிகலாவுடன் சேர்ந்து விட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக என்னை பழி வாங்கி விட்டார்கள். எனது எம்.எல்.ஏ பதவியை அதிகார வர்க்கம் பறித்துவிட்டது.

மக்கள் சேவை செய்ய வந்த என்னை பழி வாங்கி கைகளை கட்டி போட்ட காரணத்தினால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது.  இந்த தேர்தலில் எனக்கு வாய்ப்பு தாருங்கள். நான் விட்ட பணிகளை துவக்க ஆணையிடுங்கள். இவ்வாறு  அவர் பேசினார். உடன் கருங்குளம் ஒன்றிய செலயாளர் சிவசுப்பிரமணியன், மாநில அண்ணா தொழில் சங்கபேரவை பொருளாளர் நெல்லை பரமசிவன், கோட்டபொறுப்பாளர் பொன்னுசாமி, ஆவின் அண்ணாசாமி, மண்டல பொறுப்பாளர் பொன்னையா, சரவணன் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories: