நாகலாபுரம் பள்ளியில் ஆங்கில பேச்சு பயிற்சி முகாம்

விளாத்திகுளம், மே 14: நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 7 நாட்கள் இலவச ஆங்கில பேச்சு பயிற்சி மற்றும் யோகா பயிற்சி முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி தலைமை வகித்து வரவேற்று பேசினார். பள்ளி நிர்வாக குழு தலைவர் தங்கமணி, செயலர் மாரி கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆங்கில முதுகலை ஆசிரியர் ஜான் ஸ்டேனி, அரசியல் அறிவியல் முதுகலை ஆசிரியர் குணசேகரன், இடைநிலை ஆசிரியர்கள் கவிதா, ரமேஷ், உடற்கல்வி ஆசிரியை நர்மதா ஆகியோர் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கான அடிப்படை பயிற்சி மற்றும் யோகா பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பள்ளி செயலர் மற்றும் முன்னாள் பேராசிரியர் பால்பாண்டியன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்.

The post நாகலாபுரம் பள்ளியில் ஆங்கில பேச்சு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: