திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிவகாசி,  மே 14: சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு  தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக  நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு  மருத்துவமனையில் தினசரி 400 முதல் 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து  செல்கிறார்கள். அரசு மருத்துமனையில் கூடுதல் டாக்டர் நியமிக்க வேண்டும்,  மின்சார வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், டாக்டர்கள் உரிய நேரத்தில்  பணிக்கு வரவேண்டும்.

மருந்து மாத்திரைகள் தேவைக்கு ஏற்ப கிடைக்க வேண்டும்  உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தவம் தலைமை வகித்தார். மாதர் சங்க  மாநில செயலாளர் லட்சுமி துவக்கி வைத்தார். சிபிஎம் ஒன்றிய செயலாளர்  பாலசுப்பிரமணியன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வானை வாலிபர் சங்க  மாவட்ட தலைவர் பாரத் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Related Stories: