வடசேரி மாசான சுடலை சுவாமி கோயில் திருவிழா இன்று நடக்கிறது

நாகர்கோவில், மே 10:  வடசேரி வெள்ளாளர் சமுதாய மாசான சுடலை சுவாமி கோயில் திருவிழா இன்று(10ம் தேதி) நடக்கிறது. காலை 7 மணிக்கு வடசேரி வெள்ளாளர் சமுதாய சாஸ்தான் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. 9 மணிக்கு பழையாற்றில் இருந்து கட்டபுளியமூடு கோயிலுக்கு புனிதநீர் எடுத்து வருதல், 11 மணிக்கு மந்திரமூர்த்தி, தம்புராட்டி, சுடலைமாடன், பேச்சியம்மாள், ஈனபுலமாடன், புலமாடத்தி, சிவனணைந்த பெருமாள், குஞ்சுமாடன் ஆகிய மூலஸ்தான தெய்வங்களுக்கு களபம் சார்த்துதல் நடக்கிறது.

மதியம் 12 மணிக்கு கட்டபுளியமூடு மந்திரமூர்த்தி மூலஸ்தானத்தில் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு மாசான சுடலை சுவாமிக்கு களபம் சார்த்துதல், 7 மணிக்கு மாசான சுடலை சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, 7.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் டிரஸ்ட் தலைவர் முத்தரசு மற்றும் விழாக்குழுவினர், மாசான சுடலை சுவாமி பக்தர்கள் செய்துள்ளனர்

Related Stories: