தொழிலாளர்கள் வேலை நீக்கம் தனியார் தொழிற்சாலையை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக் கோட்டை சிப்காட் வளாகத்தில் தனியார் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகின்றது. இந்த தொழிற்சாலையில் போர்டு, நிசான், மாருதி, அசோக்லைலாண்ட், வேல்வோ, டைம்லர் உள்ளிட்ட பிரபல மோட்டார் வாகன தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கார், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்குத் தேவையான அனைத்து வித கண்ணாடிகளையும் தயாரித்து வருகின்றனர்.

இங்கு 239 நிரந்தர தொழிலாளர்கள், 1500க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் பணிசெய்து வருகின்றனர். நிரந்த தொழிலாளர்கள் இணைந்து சிஐடியு சங்கத்தைத் துவக்கியுள்ளனர். தொழிற்சங்கம் வைத்ததற்காக 28 தொழிலாளர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது இந்நிலையில் 28 தொழிலாளர்கள் மீதான சட்ட விரோத வேலை நீக்கத்தை ரத்து செய்திட வேண்டும். தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.

இடைநீக்கம் மெமோ எனத் தொழிலாளர்களை மிரட்டும் நிர்வாகத்தைக் கண்டித்தும், ஒரு வருடமாகத் துவங்காத சம்பளப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்க வேண்டும், பேச்சுவார்த்தையைத் தொழிற்சங்கத்துடன் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஸாஹி தொழிற்சாலை அருகில் சிஐடியு சார்பில் நிரந்தர தொழிலாளர்கள் கடந்த 44 வது நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் நடத்திவருகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தொழிலாளர் நலத்துறை உடனடியாக தலையிட்டு பேசித்தீர்க்க வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் சிங்கபெருமாள் கோயில் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: