10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாரதி மேல்நிலைப்பள்ளி சாதனை

நாமக்கல், மே7: நாமக்கல் ரெட்டிப்பட்டியில் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாரதி மேல்நிலைப்பள்ளி, பாரதி வித்யலயா ஆகிய பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளியில் இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 756 மாணவ மாணவிகளில் 755 பேர் தேர்ச்சி பெற்று பள்ளி 99.8 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவன் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி மற்றும் மாணவன் ஆகிய இருவர் 500க்கு 490 மதிப்பெண்கள் இரண்டாமிடமும், மாணவன் 485 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 490க்கு மேல் மூன்று பேரும், 480க்கு மேல் நான்கு பேரும், 470க்கு மேல் 23 பேரும், 460க்கு மேல் 31 பேரும், 450க்கு மேல் 35 பேரும், 400க்கு மேல் 216 பேரும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில், 721 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 719 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி 99.72 தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளியில் முதல் மாணவர் 600க்கு 581 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இரண்டு மாணவர்கள் 600க்கு 576 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி 600க்கு 570 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

பள்ளியில் 580க்கு மேல் ஒருவரும், 570க்கு மேல் மூன்று பேரும், 560க்கு மேல் ஐந்து பேரும், 550க்கு மேல் 15 பேரும், 500க்கு மேல் 67 பேரும் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும், பயிற்று வித்த ஆசிரியர்களையும், பள்ளி தலைவர் டாக்டர் ராமசாமி மற்றும் செயலாளர் சாரதாமணி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Related Stories: