ரயில்களில் ‘ஓசி’ பயணம் 197 பேரிடம் ரூ.1.87 லட்சம் வசூல்

மதுரை, மே 7: தென் மாவட்ட ரயில் நிலையங்களில் அவ்வப்போது டிக்கெட் பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை மேற்ெகாண்டு வருகின்றனர். கடந்த வாரம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த சோதனை நடந்தது. கோட்ட ரயில்வே உதவி வர்த்தக மேலாளர் பிள்ளைக்கனி மேற்பார்வையில், முதன்மை டிக்கெட் ஆய்வாளர் முனியசாமி தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள் இந்த பரிசோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பல ரயில்களில் பயணம் செய்த 187 பயணிகள், டிக்கெட் எடுக்காமல் பயணித்தல், வகுப்பு மாறி பயணித்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இவர்களுக்கு விதிமீறல்களுக்கு ஏற்றவாறு அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 356 வசூலிக்கப்பட்டது.இதேபோல் மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரையில் சோதனை செய்தபோது, சோலாப்பூரிலிருந்து மதுரை வந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள், தங்களது வயதை 60 வயதுக்கு மேல் காட்டி, சிட்டிசன்ஸ் பிரிவினருக்கான சலுகை கட்டண டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து, பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டு, இவர்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Related Stories: