முத்துப்பேட்டை கற்பகநாதர்குளம் கற்பக மாரியம்மன் கோயில் விழாவில் சுவாமி வீதியுலா

முத்துப்பேட்டை, மே 7: முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் கற்பக மாரியம்மன் கோயில் உற்சவ பெருவிழாவையொட்டி சுவாமி வீதியுலா நடந்தது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த அடுத்த கற்பகநாதர்குளம் கற்பகமாரியம்மன் கோயிலில் 29ம் ஆண்டு உற்சவ பெருவிழா சமீபத்தில் துவங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் வீதியுலா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வாகனத்தில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Related Stories: