மல்லிகை விவசாயத்தை மேம்படுத்த திட்டங்கள்: திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் உறுதி

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. நேற்று திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வலையபட்டி, வளையங்குளம், எலியார்பத்தி, பாரபத்தி, சோழாங்குருணி, நல்லூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். ராஜபாளையம் எம்எல்ஏ, தங்கபாண்டியன், திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் வேட்டையன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர். மக்கள் மத்தியில் வேட்பாளர் சரவணன் பேசும்போது, ‘தொகுதியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இப்பகுதியில் மல்லிகை விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். இந்த விவசாயத்திற்கு தேவையான அனைத்து வேளாண் உதவிகளையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை, திட்டங்கள் நிறைவேற்றுவதை தீவிரப்படுத்துவேன்.

கடந்த தேர்தலில் செய்த தவறையே, வாக்காளர்களான நீங்கள் மீண்டும் செய்து விடாதீர்கள். மத்தியில் விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடியாகும். நூறு நாட்களுக்கான வேலைக்கு  ஒரு நாள் சம்பளம் ரூ.300 ஆகும். குடும்பத்தலைவியின் வங்கிக்கணக்கில் பணம் சேரும். உதயசூரியனுக்கு வாய்ப்பளித்தால் உங்கள் வாழ்க்கை வளமாகும். கடந்த 8 ஆண்டுகளாக மக்களின் அடிப்படை தேவைகளை தீர்க்காமல், மீண்டும் அதிமுகவினர் வாக்கு கேட்டு வருகிறார்கள். அவர்களை தோற்கடியுங்கள்’ என்றார்.

Related Stories: