பாகிஸ்தான் எல்லை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தரை இறங்கி போர் விமானங்கள் பயிற்சி : அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி பங்கேற்பு!!

ஜெய்ப்பூர் : பாகிஸ்தான் எல்லை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படையின் அவசரகால இறங்குதளம் திறக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில்(தேசிய நெடுஞ்சாலை-925 கந்தவ் பகசார் பிரிவில்,) போர் விமானங்கள் இறங்குதளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் திறந்து வைத்தனர்.இந்திய விமானப்படையின் விமானங்களை அவசரமாக தரையிறக்க தேசிய நெடுஞ்சாலை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.அமைச்சர்கள் மற்றும் விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதுரியா ஆகியோரை சுமந்தபடி சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் சரக்கு விமானம் பயிற்சியில் ஈடுபட்டு தரை இறங்கியது. இதே போன்று ஜாக்குவார் ரக போர் விமானங்களும் அவசரகால இறங்குதளத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.பாகிஸ்தான் எல்லை அருகே பார்மர் மற்றும் ஜாலோர் மாவட்டங்கள் இடையே அவசரகால இறங்குதளம் அமைந்துள்ளது. இது போன்ற ராணுவத்தின் அவசர தேவைகளுக்கு ஏற்ப குந்தான்புரா, சிங்கானியா மற்றும் பகசார் கிராமங்களில் 3 ஹெலிபேட்கள் (ஒவ்வொன்றும் 100 x 30 மீட்டர் அளவு) கட்டப்பட்டுள்ளன. இது நாட்டின் மேற்கு சர்வதேச எல்லையில் இந்திய இராணுவத்தின் கண்காணிப்பு வசதியையும், பாதுகாப்பு வளையமைப்பையும் வலுப்படுத்தும்…

The post பாகிஸ்தான் எல்லை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தரை இறங்கி போர் விமானங்கள் பயிற்சி : அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி பங்கேற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: