காஞ்சாம்புரம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா

நித்திரவிளை, மே 1 : காஞ்சாம்புரம் பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பரணி ஆண்டுத் திருவிழாவும், சமய மாநாடும், அம்மன் கொடை விழா மற்றும் ஆறாட்டு திருவிழா 5ம் தேதி துவங்கி   14ம் ேததி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை பள்ளியுணர்த்தல், கணபதி ஹோமம், அஸ்டாபிஷேகம், காலை பூஜை, தீபாராதனை, முளபாளிகை பூஜை, மதியம் மதியபூஜை, சீவேலி, அன்னதானம், மாலை திருவிளக்கு பூஜை, தீபாராதனை, இரவு புஷ்பாபிஷேகம்,  சிறப்பு பூஜை, அம்மன் எழுந்தருளல் ஆகியன நடக்கிறது சிறப்பு நிகழ்வாக முதல்நாள் காலை கொடியேற்று, 2ம் நாள் மாலை திருவிளக்கு பூஜை,  3ம் நாள் காலை 108 சங்காபிஷேகம், மாலை  துர்கா பூஜை, 4ம் நாள் மதியம் சமய மாநாடு, 5ம் நாள் மாலை திருவிளக்கு பூஜை, இரவு நாகரூட்டு, 6ம் நாள் மாலை திருவிளக்கு பூஜை, இரவு மாடன் தம்புரான் கொடை,  7ம் நாள் காலை வில்லிசை தொடர்ச்சி, பொங்காலை, தாலப்பொலி ஊர்வலம், 8ம் நாள் பால் சந்தன குடம் ஊர்வலம், மதியம் அம்மன் யானை மீது ஊர் பவனி வருதல், மாலை தீபாராதனை, நள்ளிரவு விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல், 9ம்  நாள் காலை யானை மீது அம்மன் ஊர்பவனி , மாலை துர்கா பூஜை, இரவு வில்லிசை, அம்மன் கொடை, நள்ளிரவில் பள்ளிவேட்டை நடக்கிறது. 10ம் நாள் அம்மன் தாலப்பொலி மேளதாளத்துடன் யானை மீது ஆறாட்டுக்கு எழுந்தருளல் நடக்கிறது.

Related Stories: