நீடாமங்கலம் திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி விழா

நீடாமங்கலம், மே 1: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கோரையாறு அருகில் அமைந்து அருள்பாலித்து வரும் திரவுபதியம்மன் கோயிலில் 41வது ஆண்டு   சித்திரை திருவிழா கடந்த 22ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் உபயதாரர்களின் மண்டகப்படியுடன் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலை கோயிலிலிருந்து வாண வேடிக்கையுடன் சாமி புறப்பட்டு யமுனாம்பாள் கோயில் வளாகம் வந்தது. அங்கு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(1ம் தேதி) பால்குடம் எடுத்தல், கஞ்சிவார்த்தலும்,  நாளை(2ம் தேதி) விடையாற்றியும், 3ம் தேதி வீர விருந்தும் நடைபெற உள்ளது.

Related Stories: