கோடைவிடுமுறையில் மாணவ, மாணவிகளுக்குஅடிப்படை நீச்சல் பயிற்சி கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு

பெரம்பலூர், ஏப்.28: கோடைவிடுமுறையையொட்டி மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை நீச்சல் கற்றுகொள்ளும் பயிற்சி முகாம் துவங்கி நடைபெறுவதால் பயிற்சியில் சேர பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல்குளத்தில் நீச்சல்கற்றுக் கொள்ளும் திட்டத்தின்கீழ் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு திங்கட்கிழமை தவிர அனைத்துநாட்களும் இந்த நீச்சல்பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதில் முதல்கட்ட பயிற்சிவகுப்புகள் 23ம்தேதி தொடங்கி 30ம்தேதி முடிவடையவுள்ளது.

2ம்கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புகள் மேமாதம் 1ம்தேதிமுதல் 14ம்தேதிவரையிலும், 3ம்கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புகள் மே 15ம்தேதி தொடங்கி 31ம்தேதி வரையிலும். 4ம் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஜூன்மாதம் 1ம்தேதி தொடங்கி 14ம்தேதி வரையிலும், 5ம்கட்ட நீச்சல் பயிற்சிவகுப்புகள் ஜூன் மாதம் 15ம்தேதி தொடங்கி 30ம்தேதி வரையி லும், தினமும் காலை 7மணிமுதல் 8மணிவரையிலும், காலை 8மணிமுதல் 9மணி வரையிலும் மற்றும் மாலை 3மணிமுதல் 4வரையிலும், 4மணிமுதல் 5மணிவரையி லும் காலை, மாலை இருவேளையும் சிறந்த நீச்சல்பயிற்றுநரைக் கொண்டு 12 நாட்க ளில் அடிப்படை நீச்சல்பயிற்சி முழுமையாக கற்றுத்தரப்படுகிறது.

இதில் பயிற்சிக் கட்டணமாக ரூ.1,000க்கு வங்கி வரைவோலை எடுத்துவர வேண்டும். எனவே கோடை விடுமுறையில் மாணவ, மாணவிகள் அனைவரும் அடிப்படை நீச்சல் பயிற்சியைக் கற்று பயன்பெறலாம். நீச்சல் பயிற்சியை முழுமையாக கற்றுக்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். உடல்திறனை மேம்படுத்தி சிறந்த நீச்சல் வீரர், வீராங்கனைகளாக  உருவாகவும், தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறவும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: