தூத்துக்குடியில் மதசார்பற்ற கூட்டணி ஆலோசனை கூட்டம் ஓட்டப்பிடாரத்தில் திமுக வெற்றிக்கு அல்லும்பகலும் பாடுபட வேண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு

ஸ்பிக்நகர், ஏப். 25: ஓட்டப்பிடாரத்தில் திமுக வேட்பாளர் சண்முகையா வெற்றிக்கு கூட்டணி கட்சியினர் அல்லும், பகலும் அயராது பாடுபட  வேண்டும் என தூத்துக்குடி ஸ்பிக்நகரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசினார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி  ஸ்பிக்நகரில் நடந்தது. ஸ்பிக்நகர் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தென் சென்னை மாவட்டச் செயலாளரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஸ்பிக்நகர் பகுதி பொறுப்பாளருமான சுப்பிரமணியன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.  அப்போது அவர் பேசுகையில், ‘‘இத்தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகையா அமோக வெற்றிபெறுவது நிச்சயம். அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினர் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

மாநிலம் முழுவதும் பூத் வாரியாக 20 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதே போல் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் பூத் வாரியாக நியமிக்கப்பட்ட 20 பொறுப்பாளர்களோடு கூட்டணி கட்சியினரும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அலை வீசி வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவே மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை’’ என்றார். கூட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்னன் எம்எல்ஏ பேசுகையில்,‘‘இத்தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையா வெற்றிக்கு கூட்டணி கட்சியினர் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக அவரை 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய அல்லும்பகலும் அயராது பாடுபட வேண்டும்’’  என்றார்.

கூட்டத்தில் திமுக மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன் ஞானையா, கிருபானந்தம், ஜார்ஜ், மரிய கிராஜன், வெங்கடேஷ், அரவிந்த் ரமேஷ், பாலசுந்தரம், அரிகிருஷ்ணன், சுப்பிரமணியன், அந்தோணிராஜ், ராஜசேகர், மரியகிராஜன், அருண்குமார், காங்கிரஸ் அழகுராஜ் நாடார், ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் ராஜா, பூமயில், இந்திய கம்யூனிஸ்ட் ஞானசேகரன், சமத்துவ மக்கள் கழகத்தைச் சேர்ந்த அருண் சுரேஷ் குமார், மதியழகன், பெரியசாமி, மதிமுகவைச் சேர்ந்த முருகபூபதி, ஆதிதமிழர் கட்சி அன்பரசு, கவுதம், ஆதிதமிழர் பேரவை  நிர்வாகி முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

Related Stories: