மவுண்ட் சீயோன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை துவக்க விழா

புதுக்கோட்டை, ஏப்.25: புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2019 - 2020 ம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை துவக்க விழா நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன் செல்லையா தலைமை வகித்தார். துனைத்தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் துவக்கவுரையாற்றினார்.. கல்லூரி இயக்குனர் ஜெய்சன் வரவேற்புரையாற்றி, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கையை துவக்கி வைத்தார்.  கல்லூரி முதல்வர்  பாலமுருகன் பேசுகையில், கல்லூரி விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன்ஷிப் வென்றுள்ளது. மாணவர்களும், ஆசிரியர்களும் அகில இந்திய சுற்றுலா மற்றும் வெளிநாட்டு சுற்றுலா சென்று விஞ்ஞான தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள உலகளாவிய வளர்ச்சியை அறிந்து கொள்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் நம் மாணவர்கள் எல்லா வருடத்திலும் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளனர். ஓவ்வொரு வருடமும் நம் மாணவர்கள் தொழிற்சாலைக்குச் செல்வதோடு, தொழிற்சாலையில் பயிற்சியையும் எடுத்துக் கொள்கின்றனர் உள்ளிட்டசிறப்பம்சங்கள் பற்றி விளக்கிக் கூறினார்.மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைத்தலைவர் ராபின்சன் நன்றி கூறினார்.

Related Stories: