வைகை ஆற்று பள்ளங்களில் ஆபத்தான குளியல்

மதுரை, ஏப்.25:மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மீண்டும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த தண்ணீர் படிப்படியாக வைகை ஆற்றில் குறைந்து விடும். ஏற்கனவே வைகை ஆற்றுக்குள் ஆங்காங்கே பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தற்போது ஆற்றில் தண்ணீர் வடிந்து விட்டது. கழிவுநீர் மட்டும் பள்ளங்களுக்கு அடியில் சென்று தங்கியுள்ளது. இது தெரியாமல் சிறுவர்கள் ஆபத்து குளியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கழிவுநீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் அரங்ேகறியுள்ளன. மீண்டும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சிறுவர்களை குளிக்க விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: