* வெளி தொகுதி ஆட்கள் நுழைக்கப்பட்டனரா? * தேர்தல் ஆணையம் கவனிக்குமா? மணம் வீசாத மல்லிகை விவசாயம்

திருப்பரங்குன்றம், ஏப்.25: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் மல்லிகைப் பூ விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக வேடர் புளியங்குளம், சூரக்குளம், ஒத்தை ஆலங்குளம், வலையங்குளம், சோளங்குருணி, பரம்புபட்டி, பாரபத்தி, கொம்பாடி,வலையப்பட்டி, எலியார்பத்தி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி நடைபெறுகிறது.

தமிழகத்தில் மல்லிகைப் பூ பல்வேறு ஊர்களில் விளைவிக்கப்பட்டாலும், மதுரை மல்லிகைக்கு என்று தனி மணம் உண்டு.  இதனால் மதுரை மல்லிகை இந்தியாவின் பல்வேறு ஊர்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இத்தகைய உலகப்புகழ் மதுரை மல்லிகையை  விவசாயம் செய்யும் விவசாயிகள் நீண்ட நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சோளங்குருணியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் கூறுகையில்,`` மல்லிகையை பொறுத்தவரையில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும்  கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் உள்ள சில ஊர்களிலும் பயிரிடப்படுகிறது. ஆனால், மதுரை மல்லிகையின் மணம், அதாவது மதுரை மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை போன்ற பகுதிகளில் பயிரிடப்படும் மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு இதற்கு இப்பகுதி மண்ணின் தன்மையே காரணம்.

மேலும் இப்பகுதியில் விளையும் மல்லிகை நாற்றுகள் ராமேஸ்வரம் பகுதியில் மட்டுமே பதியம் போடப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து தான் அனைத்து ஊர்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்படுகிறது.  இத்தகைய மல்லிகை விவசாயத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மல்லிகையில் வரக்கூடிய பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு என பிரத்யேக பூச்சி மருந்துகள் இல்லை. பொதுவாக காய்கறி பயிர்களுக்கு தெளிக்கும் மருந்துகளையே இதற்கும் பயன்படுத்துகின்றோம். சாதாரண நாட்களில் கிலோ ரூ.100லிருந்து 200 ரூபாய் வரையும், சீசன் காலங்களில் ரூ.500 முதல் ரூ.800 வரையும் மல்லிகைப்பூ விற்பனையாகிறது. ஆனால் தற்போது விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அத்துடன் வறட்சி காரணமாகவும் மல்லிகை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மல்லிகை செடிகள் கருகி விட்டன.  மல்லிகைக்கென மதுரை விமான நிலையம் அருகே குளிர்பதனக் கிட்டங்கி அமைக்க வேண்டும். மேலும் இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மல்லிகை சென்ட் தயாரிப்பு நிறுவனம் அமைக்க வேண்டும். மதுரையின் பெருமைக்குரிய மல்லிகை விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘’ என்று கூறினார்.

பாதுகாக்க அரசு முன் வருமா?

வாக்காளர் எகிறிய விவரம்

2018 செப்டம்பர் இறுதி பட்டியல்    -2,84,318

2019 ஜனவரி இறுதி பட்டியல்    -3,01,557

4 மாத இடைவெளி வித்தியாசம்    -17.239

Related Stories: