திருவாரூர் மாவட்டத்தில் கட்டுமான நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஏப். 24: திருவாரூர் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர்கள் உதவி ஆணையர் தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் நடப்பாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை பயின்று அறிவு கூர்மையான குழந்தைகள் வட்டாwரத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து அவர்களுக்கு தங்கள் பகுதிகளில் உள்ள சிறந்த தனியார் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி வழங்க தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை ஆணை வெளியிட்டுள்ளது. இதேபோல் 10ம் வகுப்பிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகள் மாவட்டத்திற்கு 10 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கல்வி வழங்கவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுவால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக ரூ.15 ஆயிரம் மற்றும் பராமரிப்பு கட்டணமாக ரூ.5 ஆயிரம்  ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை இத்திட்டத்தின்கீழ் சிறந்த தனியார் பள்ளிகளில் சேர்த்து பயன் பெறுவதற்கு இதற்கான விண்ணப்ப படிவங்களை திருவாரூர் பெரிய மில் தெருவில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தொழிலாளர் உதவி ஆணையர் தர் தெரிவித்துள்ளார்.

Related Stories: