ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதிக்கு கண்டனம் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தீர்மானம்

மயிலாடுதுறை ஏப்.23.    காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கியுள்ளதை மீத்தன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துத் தீர்மானம்  நிறைவேற்றியுள்ளது.மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசணைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. கூட்டத்தில், கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு கிணறுகள் அமைப்பதை மக்கள் கடுமையாக தொடர்ந்து எதிர்த்துப் போராடி வந்தாலும், அதை அலட்சியப்படுத்தி விட்டு, ஹைட்ரோகார்பன் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்திய அரசு முயற்சிக்கிறது. இதை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாக

கண்டிக்கிறது.காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மூன்று சுற்று ஏலங்கள் நடத்தப்படுகின்றன. கடந்த 1 அக்டோபர் 2018 அன்று நடத்தப்பட்ட முதல் சுற்று ஏலத்தில், வேதாந்தா நிறுவனம் ஓஎன்ஜிசி நிறுவனமும் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகளை ஏலத்தில் எடுத்த பகுதிகளில் அமைகின்றன.  இதில் ஓஎன்.ஜி.சி. அமைக்க உள்ள 67 கிணறுகளில்,  27 கிணறுகளுக்கு முன்னமே ஆய்வு அனுமதியை சுற்றுச்சூழல் துறை வழங்கி விட்டது. இப்போது மேலும் 40 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஆய்வு அனுமதியை பெற்றுள்ளது.

மக்கள் கருத்துக் கேட்பு இல்லாமல் இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் விதிமுறைகளை திருத்த வேண்டும் என்று கடந்த 9.10.2018 அன்று தமிழக அரசு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனனிடம் அளித்த  கோரிக்கையை தமிழக அரசு உடனடியாகதிரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.இத்திட்டம் ஒட்டுமொத்தமாக படுகையை அழித்துவிடும். ஆகவே இத்திட்டங்களை இந்திய அரசு உடனே கைவிட வேண்டும் அவ்வாறு கைவிடுமாறு தமிழக அரசு இந்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டங்களைத்  தடுத்து நிறுத்தும் வகையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மக்களை அணிதிரடடி, அடுத்த கட்டப் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றார்.

Related Stories: