கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வறட்சியால் காய்ந்து கிடக்கும் மரங்கள்

கரூர், ஏப்.23:  கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வறட்சியால் மரங்கள்  காய்ந்து கிடக்கிறது.  கரூர் மாவட்டத்தில் கடும்வெயில் சுட்டெரிக்கிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றி வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.இவை வளர்ந்து வந்த நிலையில் வறட்சியால் தண்ணீர் கிடைக்காமல் காய்ந்து வருகின்றன. இலைகள் உதிர்ந்து கிளைகளில் குச்சிகள் மட்டுமே  காணப்படுகிறது. செடிகளுக்கும் மரங்களும் தண்ணீர் ஊற்றி துளிர்க்க செய்யவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: