பள்ளிகள், தேர்வு மையங்கள் வாயிலாக பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பு

நாகர்கோவில், ஏப். 23:    பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய பள்ளிகளில் மாணவ, மாணவிகள் நேற்று விண்ணப்பித்தனர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19ம் தேதி வெளியானது. மாணவர்கள், தனி தேர்வர்கள் தங்கள் விடைத்தாளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக கருதினால் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யலாம் எனவும், விடைத்தாளை மறுகூட்டல் செய்யலாம் எனவும் ெதரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று (22ம் தேதி) மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளியில் விண்ணப்பித்தனர்.   விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய ஒவ்வொரு  பாடத்திற்கும் ₹275 கட்டணம் செலுத்தி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். இதுபோல் தனி தேர்வர்களும் சிலர் தேர்வு மையங்கள் வழியாக விண்ணப்பித்தனர்.  மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடத்திற்கு ₹305ம், இதர  பாடங்களுக்கு தலா ₹205 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தனர்.  நாளை (24ம் தேதி) வரை விண்ணப்பிக்க கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று பல பள்ளிகளில் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.

Related Stories: