அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா கூட்டத்தில் பலரிடம் செல்போன், பணம் பறிப்பு வாலிபர் கைது

மதுரை, ஏப். 22: அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்க்க வந்த வாலிபரிடம் செல்போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பியவர்களை தேடி வருகின்றனர். மதுரை மேல அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ெஜயகுமார்(26). இவர் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண வந்தார். தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே  அழகரை தரிசனம் செய்துகொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு மர்ம நபர், ஜெயகுமாரிடமிருந்த, ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றார். இதைப்பார்த்த கூட்டத்திலிருந்த சிலர் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அவர் தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர், அலங்காநல்லூர் அருகே உள்ள பொந்துகம்பட்டி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஜெயமணி மகன் மணி(22) என்பது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.  இதேேபால் ஆரப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் என்பவரிடமிருந்த, செல்போனை மர்ம நபர் பறித்துச் சென்றவிட்டார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் மூங்கில்கார படித்துரையை சேர்ந்த ராணுவ வீரர் பாண்டியராஜசோழன்(32) தனது மனைவியுடன் அழகரை தரிசிக்க வந்திருந்தார். இவரை வழிமறித்து, டூவீலரில் வந்த 3 மர்ம நபர்கள் இவரிடமிருந்த, ஒரு செல்பேன் மற்றும் ரொக்கம் ரூ. 500ஐ பறித்துச் சென்றுவிட்டனர். *பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்த முருகநாதன் மகன்  செல்வகுமார்(26). இவர் மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் அழகரை தரிசிக்க வைகை ஆற்றுப்பகுதிக்கு வந்துவிட்டு, வீடு திரும்பினார். திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள, தெப்பக்குளம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது,  அங்கு வந்த 3 மர்ம நபர்கள், செல்வகுமாரிடமிருந்த ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள ஒரு செல்போன் மற்றும் ரூ.ஆயிரத்தை பறித்துச் சென்றுவிட்டனர்.  சித்திரைத் திருவிழாவில் நடந்த, இது ேபான்ற பல்வேறு வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக தல்லாகுளம், திலகர்திடல், திடீர் நகர் மற்றும் மதிச்சியம் போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து வழிப்பறி செய்து தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: