ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்னவெங்காயம் விலை கிலோ ரூ.40 ஆக உயர்வு கடந்த வாரம் ரூ.15க்கு விற்றது

ஒட்டன்சத்திரம், ஏப்.22: ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு சின்னவெங்காயம் வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது.

ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளான ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, கேதையுறும்பு, கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, கரியாம்பட்டி, தேவத்தூர், இடையகோட்டை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வெங்காய பயிரை நடவு செய்து வந்தனர். இப்பகுதிகளில் பருவமழை பெய்யாததாலும், கடும் வெயிலாலும் சின்னவெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைவால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. சின்னவெங்காயம் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர். ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிலிருந்து அதிகளவு சின்னவெங்காயம் கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

Related Stories: