கோவில்பட்டி கோட்டத்துக்குட்பட்ட அஞ்சலகங்களில் ஆதார் சேவை துவக்கம்

கோவில்பட்டி, ஏப்.21:  கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் ஆதார் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சாந்தகுமார் தெரிவித்துள்ளார்இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் ஆதார் சேவையை பல்வேறு அஞ்சலங்களில் செயல்படுத்தி வருகிறது. தற்போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட தலைமை மற்றும் துணை அஞ்சலங்களில் ஆதார் சேவை மையம் இயங்க உள்ளது.

இந்த மையங்களில் பொதுமக்கள் தங்களது ஆதாரில் தேவையான மாற்றங்களை செய்யவும், புதியதாக ஆதார் எடுத்து கொள்ளலாம். இதன்படி கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட துணை அஞ்சலகங்களான எப்போதும்வென்றான், கடம்பூர், கயத்தாறு, நாகலாபுரம், நாலாட்டின்புதூர், புதூர், திருவேங்கடம், தேவர்குளம், கரிவலம்வந்தநல்லூர், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், முள்ளிகுளம், சேர்ந்தமங்கலம், வாசுதேவநல்லூர், வீரசிகாமணி, ஆலங்குளம், கீழப்பாவூர், நல்லூர், பாவூர்சத்திரம், சுரண்டை, வீரகேரளம்புதூர் ஆகிய துணை அஞ்சலங்களில் தினமும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரையும் ஆதார் பணிகள் நடக்கிறது. மேலும் எட்டயபுரம், விளாத்திகுளம், கழுகுமலை, கடையநல்லூர், செங்கோட்டை, லட்சுமிபுரம், புளியங்குடி, சிவகிரி ஆகிய துணை அஞ்சலங்கள் மற்றும் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்களில் தினமும் அலுவலக வேலைநேரங்களில் ஆதார் சேவையை பெற்று கொள்ளலாம்.   இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: