நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா

நீடாமங்கலம்,ஏப்.18: நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயில் ஸ்ரீராமநவமி சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.இக்கோயிலில் கடந்த 13ம் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கி 14ம் தேதி தேதி ராமர் திருமஞ்ஜனமும் சூர்ய பிரபையில் வேணுகோபாலன் அலங்கார வீதியுலா நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று ராமர் திருமஞ்ஜனமும் மாலை ஹனுமந்த  வாகனத்தில் பட்டாபி ராம சேவை வீதியுலா நடந்தது.வரும் 21ம் தேதி திருத்தேர் புறப்பாடு நடைபெற உள்ளது.வரும் 23ம் தேதிவரை திருவிழா நடைபெறுகிறது. தினந்தோறும் உபயதாரர்களின் மண்டகபடியும் ,வாண வேடிக்கையுடன் சாமி வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Stories: