அலங்காநல்லூரில் ரூ.1.04 லட்சம் பறிமுதல்

அலங்காநல்லூர், ஏப். 16: தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஒபிஎஸ் ரவீந்திரநாத்குமார் சோழவந்நான் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் மின்விநியோகத்தை தடைசெய்து, வீடுவீடாக சென்று ஒரு ஓட்டுக்கு ஆயிரம் வீதம் வாக்காளர்பட்டியலில் உள்ள வரிசைபடி பண விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.

 இது குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வாடிப்பட்டி தேர்தல் பார்வையாளர்களுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், அலங்காநல்லூர் 8வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும் படை தாசில்தார் மலர்விழிக்கு காவல் கட்டுபாட்டு அறையில் இருந்து தகவல் வந்தது. இதன்பேரில், அதிகாரிகள் ரோந்து சென்றபோது வாக்காளர் பட்டியல் மற்றும் 1 லட்சத்து 4 ஆயிரம் பணத்தை சாலையில் வீசிவிட்டு மர்ம நபர்கள் ஓடியதாக கூறப்படுகிறது.

இது குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், ‘பணம் கொடுக்கும் போது கண்டுகொள்ளாத தேர்தல் பறக்கும் படை கண்துடைப்புக்காக அலங்காநல்லூரில் ரூ.1.04 லடசத்தை பறிமுதல் நாடகம் செய்கிறது என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைதுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related Stories: