திருவாரூர் மாவட்டம் பேரளம் சங்கரா பள்ளியில் சயின்ஸ், தீம் பார்க் துவக்க விழா

திருவாரூர், ஏப். 16: திருவாரூர் மாவட்டம் பேரளம் சங்கரா பள்ளியில் சயின்ஸ் பார்க் மற்றும் தீம் பார்க் துவக்க விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் தங்களது கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதற்காக சயின்ஸ் பார்க் மற்றும் தீம் பார்க் திறப்பு விழா தாளாளர்  வெற்றி செல்வம் தலைமையில் நேற்று  முன்தினம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதனை மயிலாடுதுறை ரோட்டரி கிளப் ஆப் உதவி ஆளுநர்  செல்வநாயகம் மற்றும் பாண்டிச்சேரி முன்னாள்  மாவட்ட ஆளுநர் மணி ஆகியோர் திறந்து வைத்து பேசுகையில், திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயனடையும் வகையில் இந்த சயின்ஸ் பார்க் திறக்கப்பட்டுள்ளது.

இதில்  அறிவியல் தொடர்பான பல வகை ஆய்வக உபகரணங்களை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது  அனுபவத்தை அதிகரித்து கொள்ளலாம். இதேபோல் 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கண்டுகளிக்கும் வகையில் தீம் பார்க் திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் சென்னை உட்பட பெரிய நகரங்களில் மட்டுமே இதுவரையில் நடைபெற்று வந்த நிலையில் இது போன்ற வசதிகள் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பள்ளியில்  இது போன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் நேரில் பார்வையிட்டு கண்டுகளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாடு பயிற்சியாளர் ராமன் மற்றும் கல்வியாளர்கள் பாணி, ரமேஷ், கவுரிசங்கர், தொழிலதிபர் கனகராஜன், டாக்டர் மாசிலாமணி, கபடி கழக மாநில செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இயக்குனர் சுகுமார் நன்றி கூறினார்.

Related Stories: