பள்ளிப்பட்டி முனியப்பன் கோயில் சித்திரை திருவிழா

சேலம், ஏப்.14: தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி, பள்ளிப்பட்டி 8வது வார்டில் உள்ள செங்காட்டு முனியப்பன் கோயிலில், மழை பொழிய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் நோயின்றி நலமுடன் வாழவும் வேண்டி, இன்று(14ம் தேதி) சிறப்பு வழிபாடு நடக்கிறது. காலை 7.30 மணியளவில் முனியப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செங்காட்டு முனியப்பன் கோயில் மற்றும் அத்தனூர்பட்டி பங்காளிகள் செய்துள்ளனர்.

Related Stories: