சென்னை-மங்களூரு எக்ஸ்பிரசில் கூடுதல் ஏசி பெட்டி இணைப்பு

சேலம், ஜூன் 8: சென்னையில் இருந்து சேலம் வழியே மங்களூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் (12685, 12686) இருமார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் தற்போது நிரந்தரமாக கூடுதலாக ஒரு மூன்றடுக்கு எக்கனாமிக் ஏசி பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதன்மூலம் முதல் வகுப்பு ஏசி பெட்டி-1, இரண்டடுக்கு ஏசி பெட்டி-2, மூன்றடுக்கு ஏசி பெட்டி-4, மூன்றடுக்கு எக்கனாமிக் ஏசி பெட்டி-2, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி-8, முன்பதிவில்லா பொது பெட்டி-3, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி-1, பார்சல் பெட்டி-1 என 22 பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post சென்னை-மங்களூரு எக்ஸ்பிரசில் கூடுதல் ஏசி பெட்டி இணைப்பு appeared first on Dinakaran.

Related Stories: