நர்சிங் மாணவி தற்கொலை

சேலம், ஜூன் 7: சேலம் அழகாகபுரம் சண்முகம் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் பொற்செல்வி(20). இவர் சேலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொற்செல்வி செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த பொற்செல்வியின் தாயார் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி சேலம் அரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post நர்சிங் மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: