2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

சேலம், ஜூன் 9: சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(33). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா(28). இவர்களுக்கு 8வயதில் மகனும், 6வயதில் மகளும் உள்ளனர். பவித்ரா, தனது கணவரின் தம்பி வைத்துள்ள டீ கடையில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் மீணடும் வீடு திரும்பவில்லை. வீட்டில் இருந்த குழந்தைகளும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுரேஷ்குமார் அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

The post 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: