சண்முகா கிளினிக்ஸ் திறப்பு விழா

சேலம், ஜூன் 5: சேலம் சண்முகா மருத்துவமனையின் சார்பில் சண்முகா கிளினிக்ஸ்(மருத்துவர் ஆலோசனை, ரத்த பரிசோதனை-மருந்தகம்) திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் தலைவர் டாக்டர். பன்னீர்செல்வம் மற்றும் துணைவியார் ஜெயலட்சுமி பன்னீர்செல்வம் தலைமை வகித்தனர். முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர். பிரபுசங்கர், மருத்துவ நிர்வாக இயக்குனர் டாக்டர். பிரியதர்ஷினி மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். திறப்பு விழாவை முன்னிட்டு அனைத்து வகை மருந்துகளுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். மேலும், வீட்டிற்கே வந்து ரத்த மாதிரிகள் எடுத்து தரப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post சண்முகா கிளினிக்ஸ் திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: