புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயிலால் பறக்கும் படையினர் அவதி சோதனை முழுமையாக நடைபெறுமா?

புதுக்கோட்டை, ஏப்.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைப்பதால் பறக்கும் படையில் பணியாற்றும் அலுவலர்கள், போலீசார் சுறுசுறுப்பு இழந்து காணப்படுகின்றனர்.வரும் 18ம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய ஆவனங்கள் இன்றி பணம் கொண்டு சென்றால் அதனை பறிமுதல் செய்தல், வேட்பாளர்கள் செய்யும் செலவுகளை கணகாணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 36 குழுக்குள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.இந்த குழுக்களின் பணிகளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்து அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.

ஒவ்வொரு தேர்தல் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் கண்காணிக்கும் பணி எளிதில் நடைபெற்று வருகிறது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒரு டிஎஸ்பி தலைமையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 24 மணி நேரத்திற்கு 3 குழுக்கள் 8 மணி நேரத்திற்கு ஒரு குழு என பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் வெயில் கடுமையாக வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரத்தில் வாகனங்கள் செல்லும்போது அனல் காற்றாக வீசுகிறது. இதனால் பகல் நேரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சாலைகளில் சுற்றி வரும்போது மிகவும் சிரப்படுகின்றனர்.சாலையில் வரும் வாகனங்களை மறித்து சோதனை செய்யும் போது கடுமையாக வாடி வதங்குகின்றனர். இதனால் ஒரு இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால் சாலை ஓரங்களில் உள்ள மரத்தடி மற்றும் அப்பகுதியில் சற்று ஷெட்டுகள் இருந்தால் அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு சற்று இழைப்பாருகின்றனர். குறிப்பாக இந்த பறக்கும் படையில் உள்ள போலீசார் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக வெயிலில் இருந்து தப்பித்து வருகின்றனர்.

தேர்தல் நடைபெற இன்னும் 6 நாட்களே இருப்பதால் இந்த 6 நாட்கள் எப்படி வெயிலில் இருந்து தப்பிக்க போகிறோம் என்று புழம்புகின்றனர். சில அலுவலர்களுக்கு வெயில் தாங்க முடியாமல் வெயில் கால நோய்க்கள் வருவதற்கான அறிகுறிகள் இருப்பதால் அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். இருந்தாலும் அதிக தண்ணீர், இளநீர், வெள்ளரிக்காய், குளிர்பாதனங்களை சாப்பிடிட்டு வெளியிலில் உஷ்னத்தை குறைத்து கொள்கின்றனர்.பகல் நேரத்தில் பணியாற்றும் அதிகாரிகள் எப்போது வெயில் குறையும் என்று எதிர்பார்த்து பணியாற்றி வருகின்றனர்.

Related Stories: