புதுக்கோட்டை, ஏப். 11:வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த கூடிய பொருட்களை திருச்சி பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் அமீத்குமார்பார்வையிட்டார்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த கூடிய பொருட்களை திருச்சி பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் அமீத்குமார் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி பார்வையிட்டனர். பாராளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவிற்கு தேவையான படிவங்கள், கையேடு, பேப்பர் பசை, டேகுகள் உள்ளிட்ட 98 வகையான பொருட்கள் வரப்பெற்றது. இவைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் உள்ள 1,537 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.