வால்பாறை அருகே லாரி கவிழ்ந்து விபத்து

வால்பாறை, ஏப்.11: வால்பாறை அய்யர்பாடி துணை மின்நிலையம் அருகே, நேற்று முன்தினம் அதிகாலை கொச்சினிலிருந்து வால்பாறை தாய்முடி எஸ்டேட்டிற்கு டீ துாள் கழிவுகள் ஏற்றி வந்த லாரி ஒன்று வால்பாறை பொள்ளாச்சி சாலையில் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.இதில் லாரி ஒட்டுனர் அபுசலி மணி(48) லேசான காயம் அடைந்தார். பின் லாரியை மீட்கும் பணி நடைபெற்ற போது அப்பகுதியல் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடபட்டதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து தடை எற்பட்டது.

Related Stories: