40 தொகுதிகளிலும் பா.ஜ கூட்டணி வெற்றிபெறும்

குளச்சல், ஏப். 9:  கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காலை மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், எங்கள் வீட்டிலும் வருமானவரி சோதனை நடத்தப்படவுள்ளது. சோதனை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வரும்போது வரவேற்பேன் என்று கூறியுள்ளார். அவர் பதுக்கிவைத்துள்ள பணத்தை இடமாற்றம் செய்துவிட்டு இப்படி கூறுகிறார். குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கூறியுள்ளது, நகைச்சுவையாக உள்ளது.  ரூ.4200 கோடி மதிப்பீட்டில் குமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் வழி திட்டத்தை அவர்தான் தொடங்கி வைத்தார். அப்போது இது குமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவு திட்டம் என அவரே இணையதளத்தில் பதிவும் செய்துள்ளார்.  அப்படி பதிவு செய்துவிட்டு இப்போது அவர் குமரி மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் நடைபெறவில்லை என கூறுவது, தேர்தல் சுயநலத்திற்குதான். அமமுக 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கூறுகிறார்கள், அப்படி நடக்காது. 40 தொகுதிகளிலும் பா.ஜ கூட்டணி வெல்லும் என்றார்.

பின்னர் பிரசாரத்தை மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: குமரி துறைமுகத்தால்  மீனவர்களுக்கு  எந்த பாதிப்பும் ஏற்படாது. நம்பி தாமரை சின்னத்தில்  வாக்களிக்கலாம். துறைமுகத்துடன் மீன்பிடித்துறைமுகமும் அமையும். மீனவர்கள்  அங்கு மீன் ஏற்றுமதியும் செய்யலாம். மேலும் கப்பற்படை தளமும் அமையும்  என்பதால் கடலில் மீன்பிடி தொழில் செய்யும்போது மாயமாகும் மீனவர்களை உடனே  கண்டுபிடித்து மீட்க வசதி ஏற்படும். எனவே குமரி மாவட்டத்தில்  வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்திட பா.ஜ.வுக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.  பின்னர் அவர் புதூர்  சந்திப்பு, கருமன்கூடல், லட்சுமிபுரம், உடையார்விளை, குளச்சல் அண்ணாசிலை, இரும்பிலி, சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, ரீத்தாபுரம்,  இரணியல்சந்திப்பு, நெல்லியறைகோணம்,  பனங்குழி, கக்குளம்  வழியாக இரவு பாத்திரமங்கலத்தில் நிறைவடைந்தது.

 பொன்.ராதாகிருஷ்ணனுடன் மாவட்ட பா.ஜ தலைவர் முத்துகிருஷ்ணன், துணை தலைவர் குமரி பா.ரமேஷ், பேரூராட்சி முன்னாள் தலைவி மகேஷ்வரி முருகேசன், குளச்சல் நகர தலைவர் கண்ணன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பரமேஸ்வரன், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜன், பொருளாளர் திலக், மாவட்ட  எம்.ஜி.ஆர்.மன்ற பொருளாளர் எஸ்.எம்.பிள்ளை, நகர அ.தி.மு.க.செயலாளர்  ஆண்ட்ரோஸ், நகர தே.மு.தி.க. செயலாளர் ரீமான்ஸ், தமாக தலைவர் டி.ஆர்.செல்வம் உள்பட கூட்டணிகட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: