காரைக்கால் என்.ஐ.டியில் தேசிய கருத்தரங்கம் நிறைவு

காரைக்கால், ஏப்.7:  காரைக்கால் என்.ஐ.டியில் நடைபெற்று வந்த 2 நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று பரிசளிப்பு நிகழ்ச்சியுடன்  நிறைவு பெற்றது. காரைக்கால் என்.ஐ.டி வளாகத்தில் கணித துறையின் ‘வகைக்கெழு சமன்பாடுகள்’ என்ற தலைப்பிலான 2 நாள் சிறப்பு கருத்தரங்கம் நேற்று முன்தினம் தொடங்கியது.  இக்கருத்தரங்கத்தை பதிவாளர் சீதாராமன் தொடங்கி வைத்து பேசியது: இதுபோன்ற கருத்தரங்கம் துறைசார் ஆராய்ச்சிக்கு பக்கபலமாக இருக்கும். எனவே, இதுபோன்ற கருத்தரங்கம் தொடர்ந்து நடத்தப்படுவதும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.  

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் லட்சுமணன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 111 மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பித்த சிறந்த ஆய்வு அறிக்கைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் செய்திருந்தார். முடிவில், முனைவர் மகாபத்ரா நன்றி கூறினார்.

Related Stories: