நாமக்கல் செல்வம் கல்லூரியில் தேசிய பயிலரங்கம்

நாமக்கல், ஏப். 5: நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறையின் சார்பில், “பின் காலனியம் மற்றும் பெண்ணியம்: ஓர் இணைப்பயணம்” என்ற தலைப்பில் ஒருநாள் தேசியப் பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் டாக்டர். செல்வராஜ் தலைமை வகித்தார். செயலர் கவீத்ரா நந்தினி பாபு, நிர்வாக இயக்குநர் அருள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜவேல் வரவேற்று பேசினார்.  துணை முதல்வர்கள், புலமுதன்மையர்கள் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் ஆங்கிலத்துறைத் தலைவர் ஈஸ்வரன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். முதல் அமர்வில் சிறப்பு விருந்தினராக கேரளா கொல்லம் சிஎம்எஸ் கல்லூரி உதவிப்  பேராசிரியர் ஜோஜிஜான் பணிக்கர்  கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார். இரண்டாம் அமர்வில் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி இணை பேராசிரியர் மைதிலி சிறப்புரையாற்றினார்.

Related Stories: