தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி திமுக கூட்டணி வேட்பாளர் சின்ராஜூக்கு ஆதரவு

ராசிபுரம், மார்ச் 29: தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் பொதுக்குழு கூட்டம், ராசிபுரத்தில் நடந்தது. மாநில தலைவர் மருத்துவர் எழில்செல்வன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் தமிழ்வாணன் வரவேற்றார். செயலாளர் இளையராஜா, பொருளாளர் முத்துசாமி, செய்தி தொடர்பாளர் தமிழன் வடிவேல் முன்னிலை வகித்தனர். நிறுவனத் தலைவர் நல்வினை செல்வன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சின்ராஜூக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், அருள்மொழித்தேவன், ஜனார்த்தனன், சாதிக் அலி, அப்துல் ஹக், சரவணகுமார், இளங்கோ,  லோகநாதன், ரவி, மகளிரணி மங்கையர்க்கரசி, கார்த்திகேயன், முருகேசன், விஜய் சேகர், அருண், மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Related Stories: