பறக்கும் படைகள் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு

பெரம்பலூர்,மார்ச்28: தேர்தல் நெருங்குவதால் பறக்கும்படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு–்ள்ளது. 2சட்டமன்றத் தொகுதிகளுக்கு இயங்கிவந்த 6பறக்கும் படைகளின் எண் ணிக்கை 18ஆக உயர்த்தப்பட்டது.

இந்தியத் தேர்தல்ஆணையத்தால் கடந்த 10ம்தேதி தமிழ்நாடு, புதுவையிலுள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.தேர்தல் விதிமுறைகளைக் கண்காணித்திடும்பொருட்டு, பெரம்பலூர்(தனி), குன் னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தனித்தனியே 3பறக்கும்படைகளும், 3நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும்படைகள் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடத்திய அதிரடி ஆய்வு களில் 20நபர்களிடமிருந்து ரூ30லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணம், எல்இடி டிவி, வெள்ளிக் கொலுசுகள், பீர்பாட்டில்கள், துண்டுகள், சால்வைகள், மப்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்நிலையில் மனுதாக்கல் முடிவுக்குவந்த நிலையில் தேர்தல் பறக்கும்படை களின் எண்ணிக்கை 2மடங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதிக்கும் தலா 3பறக்கும்படைகளும், தலா 3நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு இயங்கிவந்தன. தற்போது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3ஆக இருந்த பறக்கும்படைகள் தற்போது 9பறக்கும் படைகளாக அதி கரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2தொகுதிகளில் சுற்றிவந்த 6 பறக்கும்படையினர் தற் போது 18பறக்கும்படைகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதில்,ஒவ்வொரு பறக்கும்படையிலும் ஒரு நியமனஅலுவலர் தலைமையில் ஒரு சப்இன்ஸ்பெக்டர், 3போலீசார்  என 4பேர் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். தற் போது 9பறக்கும்படைகளில் மொத்தம் 36பேர் இந்த கண்காணிப்புப் பணி, வாகனத் தணிக்கை பணிகள் முடுக்கிவிட்பட்டு, உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 18 பறக்கும் படை ஜீப்களிலும் சேட்டிலைட்மூலம் விளக்கிக்காட்டும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப் பட்டு அது, தேர்தல் கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பிலிருந்தபடி கண்காணிக்கப்ப டும். இதன்மூலம் பறக்கும்படையினர் தினமும் 50கிலோ மீட்டர் தூரமாவது சுற்றி வந்து கண்காணிக்கவும், அனுமதியின்றி ஓய்வு எடுப்பதற்காக அரைமணிநேரம் ஒரே இடத்தில் வாகனத்தைநிறுத்தி தூங்கி வழிந்தால் கூட கலெக்டர் அலுவலகத்திலுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி எச்சரிக்கவும் வசதிசெய்யப்பட்டுள்ளது.

Related Stories: