கொத்தங்குடி சாலையில் உள்ள பள்ளத்தால் வாகனஓட்டிகள் அவதி

கூத்தநாநல்லூர்,மார்ச்26: கூத்தாநல்லூர் அருகேதண்ணீர் குன்னம்  கம்மங்குடி ஆர்ச் சாலையில்உள்ளஆபத்தைவிளைவிக்கும் பள்ளத்தை சீர்செய்ய வேண்டி அரசுநெடுஞ்சலைத்துறைக்கும் மின்வாரியத்திற்கும் பொதுமக்கள்கோரிக்கைவிடுத்துள்ளனர். சமீபத்தில்அடித்தகஜாபுயலின் தாக்கத்தால்திருவாரூர் மாவட்டத்தின் பலஇடங்களில்உள்ளபெரும்பான்மையான மின் கம்பங்கள்சாய்ந்துவிட்டன. அவற்றைமின்சாரசெய்யவாரியம்விழுந்தமின்கம்பங்களுக்குபதிலாகபுதிய கம்பங்களைநட்டு மீண்டும் மின் இணைப்பைதந்தது. தண்ணீர் குன்னம் கம்மங்குடி ஆர்ச் செல்லும்  கொத்தங்குடி பிரதானசாலையில் அமைந்துள்ள காத்தாயிஅம்மன் கோயிலுக்கு அருகாமையில் காஜாபுயலில்விழுந்த மின் கம்பத்திற்குபதிலாக புதியமின்கம்பம் நடப்பட்டுள்ளது.  புதியமின்கம்பம் நடப்பட்டுள்ளஇடத்தை சுற்றி தற்போதுமிகப்பெரியபள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்தபள்ளத்தால்இரவு நேரங்களில் வரும் வாகனமும், பகல்நேரங்களில்வரும் நான்குசக்கரவாகனமும் பள்ளத்தில்விழுந்துஆபத்துஏற்படவாய்ப்புஉள்ளது. எனவேமின்கம்பத்தின் அடியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாகசீர்செய்துதரநெடுஞ்சாலைதுறைக்கும்மின்சாரவாரியத்திற்கும் பொதுமக்களும் சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: