தேர்தல் செலவின பார்வையாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை

செஞ்சி, மார்ச் 22: ஆரணி மக்களவை தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர் ரகுவன்ஸ்குமார் செஞ்சி, மயிலம் சட்டமன்ற தொகுதி

தேர்தல் அலுவலர்களிடம் தேர்தல் பணிகள் குறித்து செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் சம்பந்தமாக நடந்து வரும் பணிகள், வேட்பாளர்கள் செலவுகள் குறித்து விளக்கினார். மேலும் பிராந்தி பாட்டில்கனை பறக்கும் படையினர் பிடித்தால் அதனை அரசு டாஸ்மாக் கடையில் ஒப்படைக்க வேண்டும் என காவல் துறைக்கும், அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார், தாசில்தார்கள் செஞ்சி ஆதிபகவன், மேல்மலையனூர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர்கள் செல்வமுர்த்தி, சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மெகருன்னிசா, வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் ராதாகிருஷ்ணன், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் கலா, செஞ்சி டிஎஸ்பி நீதிராஜ், இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: