பொதுமக்களுக்கு சிறுதானியங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு சிறப்பு முகாம்

அரியலூர், மார்ச் 22: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் பொதுமக்களுக்கு சிறுதானிங்களில் ஊட்டச்சத்து குறித்த  விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அருணா வரவேற்றார். போஷன் அபியான் திட்டத்தின் வருட நிறைவு விழாவையொட்டி ஹாட்பஜார் என்ற பெயரில் அங்கன்வாடி பணியாளர்கள், சிறுதானிய வகைகளான கம்பு கேழ்வரகு, வரகு, சோளம், தினை, சாமை உள்ளிட்ட தாணியங்களில் இருந்து ஊட்டச்சத்து மாவு, பலகாரங்கள், பாயாசம், கஞ்சி தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி அதன் சிறப்பு, பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட திட்ட உதவியாளர் சரவணன், மேற்பார்வையாளர்கள் பானுமதி, ஜெயலட்சுமி, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories: