சிவகங்கை தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

சிவகங்கை, மார்ச் 21: சிவகங்கை மக்களவை தொகுதி செலவின பார்வையாளர்கள் இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: சிவகங்கை மக்களவை தேர்தலுக்கான செலவின பார்வையாளர்களாக சத்தியபிரகாஷ் ஆர் சிங், விவேக் பி உமாப் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். சத்தியபிரகாஷ் ஆர் சிங் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு செலவின பார்வையாளராக பணி மேற்கொள்வார்.

இவருடைய செல் எண்: 87792 05857, தொலைபேசி எண் 04575 241250 ஆகும். விவேக் பி உமாப் திருப்பத்தூர், திருமயம், ஆலங்குடி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு செலவின பார்வையாளராக பணி மேற்கொள்வார். இவருடைய செல் எண்: 63071 88977, தொலைபேசி எண்: 04575 241257 ஆகும். மேற்கண்ட செலவின பார்வையாளர்களின் முகாம் அலுவலகம் சிவகங்கை வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் இயங்கி வருகின்றன. தேர்தல் செலவினம் தொடர்பான தகவல்களை எப்பொழுது வேண்டுமானாலும் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: