புதுக்கோட்டை, மார்ச் 21: புதுக்கோட்டையில் நடந்த சென்ற ஆசிரியையிடம் செயினை பரித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடு வருகின்றனர். புதுக்கோட்டை நியூ டைமண்டு நகரை சேர்ந்த சங்கர் இவரது மனைவி சரஸ்வதி (38). திருமயம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை பஸ்சை விட்டு இறங்கி தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது டிவிஎஸ் அருகே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சரஸ்வதியை வழி மறித்து கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்தனர்.