வலங்கைமான் மாரியம்மன் கோயில் பாடை காவடி திருவிழாவின் போது மதுபான கடைகளை மூட வேண்டும்

வலங்கைமான், மார்ச் 21: வலங்கைமான் வரதராஜம் பேட்டைத்தெரு மகாமாரியம்மன் கோயில்  பங்குனி பாடைக்காவடி திருவிழா  தொடர்பான முன்னேற்பாடு கூட்டத்தில்  விழாகாலத்தில்  இப்பகுதியில் உள்ள மதுபான கடைகளை மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி வரதராஜம் பேட்டைத்  தெருவில் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இது சக்திஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் லட்சக்கனக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும்  பாடைக்காவடி திருவிழா வரும் 24ம் தேதி (ஞாயிற்றுகிழமை), 31ம் தேதி புஷ்பபல்லக்கு விழாவும்  நடைபெற உள்ளது-. இது தொடர்பான அனைத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முன் தினம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தேவகி தலைமையில் நடைபெற்றது.

நன்னிலம் டி.எஸ்.பி முத்தமிழ்செல்வன், ஆலய செயல் அலுவலர் சிவக்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் மகேஷ். மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி  இளநிலை உதவியாளர் ராஜேந்திரன்,  உதவி மருத்துவர் தீபா, தீயணைப்புத்துறை மூர்த்தி, மின்சார வாரியம் குமரவேல், காவல்துறை வலங்கைமான் இன்ஸ்பெக்டர் கருணாநிதி,  உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் போக்குவரத்துதுறை, நெடுஞ்சாலைத் துறை  தொடர்பான அதிகாரிகள்  பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. லட்ச்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் பாதுகாப்பு நலன் கருதி வலங்கைமான் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையை விழாக் காலத்தில் மூட வேண்டும் ,கடும் வெப்பம் நிலவுவதால் பேரூராட்சி மூலம் சாலைகளில் தண்ணீர் தெளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால் தொண்டு நிறுவனங்கள் குடிதண்ணீர் வழங்காத நிலை ஏற்படும்,

மேலும் பிளாஸ்டிக் தடை இருப்பதால் தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்காத நிலையில் தேவையான இடங்களில் கூடுதலாக டேங்குகள் அமைத்து குடிதண்ணீர் வழங்க வேண்டும், காவல் துறை சார்பில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும், சிறப்பு பேரூந்துகளில் சிறப்பு கட்டணம் வசூல் செய்யக்கூடாது, வலங்கைமான் அரசு மருத்துவமனையில்  விழாக்காலத்தில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.கூட்டத்தில் கிராமநிர்வாக அலுவலர் இளையராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: